Posts

Showing posts from July, 2024

திருப்பூர் குமரன்

                 முந்நூறு நாளில் கருசிறை முடங்கி           விடுதலை யானவர் ஒருவர் – அவர்           நிலைபெறும் கோடி மக்களில் சிறந்து           தலைதந்து காத்த புனிதர்.             மழலைப் பருவத்தில் ஏழைத் தாயின்           மடியில் வளர்ந்தவர் அவரே – வளர்ந்து           இருமூன்று வயதில் ஆரம்பப் பள்ளியில்           அறிவைப் பெற்றவர் அவரே.             இருபது வயதில் பல்லாண்டு வாழ           வழியைக் கண்டவர் அவரே – உள்ள           பல்மொழி இனத்தை ஓரினம் ஆக்க    ...

என்னில் வாழ் குமர குருபரா

கொங்குதேச மெங்குமிளிர் குமர குருபரா! செங்கோட்டை யில்நடந்த குமர குருபரா! எங்கெல்லாம் தமிழாண்டாய் குமர குருபரா! அங்கெல்லாம் கோமகனாய் குமர குருபரா! எங்கெல்லாம் குடமுழுக்கோ குமர குருபரா! அங்கெல்லாம் கோலோச்சும் குமர குருபரா! இங்கிதமாய்த் தைப்பூசம் குமர குருபரா! இனிதாக விடுப்பிட்டாய் குமர குருபரா! கொங்குதமிழ் நாக்கினிலே குமர குருபரா! கோடியர்ச்சனை விளைவிக்கும் குமர குருபரா! எங்கைமேல் கைவைத்த குமர குருபரா! ஏணிப்படி வாழ்க்கையில் குமர குருபரா! தங்காத சுழல்விழியால் குமர குருபரா! அரசாட்சி செலுத்துகின்ற குமர குருபரா! மங்காத தமிழ்ப்பேச்சு குமர குருபரா! பணிந்திட்டேன் உனதடியில் குமர குருபரா! கருவிலேயே கருணைகொண்ட குமர குருபரா! கௌமார தழைத்தோங்கும் குமர குருபரா! உருவிலேநீ குமரனாக குமர குருபரா! திருவினிலே கருணைக்கடலாய் குமர குருபரா! கிருபைக்கு விளக்கமானாய் குமர குருபரா! சிறுமைக்கு விலக்கானாய் குமர குருபரா ! கருத்தரங்க நாயகரே குமர குருபரா! கடைக்கண்ணால் கட்டுண்டேன் குமர குருபரா!

முடிவு எடுப்போம்

  இரண்டு ஆண்டு காலத்திலே           இருந்த இந்தப் பள்ளியிலே பள்ளியின் மானம் நம்மிலே – அதைக்           காப்பது நம் கையிலே அதனால் சிந்திக்க நேரமில்லை           சீரி எழுவோம் படிப்பினிலே இருப்பதோ பன்னிரண்டு நாள்           இழந்ததோ பன்னிரண்டு மாதம் இருக்கும் நாள்நம் வாழ்வில்           பொன்னாள் என்று கருதியே ஒத்திருந்து படித்திட்டால்           ஓங்கிடும் நம்பள்ளி பெருமை முதலில் வந்திருக்கும் தேர்வில்           முந்திக் கொண்டு எடுத்திடுவோம் மதிப்பெண்ணை இழந்திட்ட காலங்களில்           இருந்திட்டோம் பல வழிகளில் இருக்கும் இந்தப் பொன்னான நாளிலே           இனிப்பு வழக...

கடமை 2

  கனிகளின் கூட்டு பஞ்சா மிர்தம் கால்களின் கூட்டு தேவா மிர்தம் எழுத்தின் கூட்டு சொற்கள் ஆகுமே ஏட்டின் கூட்டு புத்தகம் ஆகுமே வரியின் கூட்டு பக்கம் ஆகுமே வரியின் சேர்க்கை மண்ணெய்ப் பெருக்குமே மேகத்தின் கூட்டு வானம் ஆகுமே கேமத்தின் கூட்டு மழையும் வருமே மழைத்துளியின் கூட்டு வெள்ளம் ஆகுமே வெள்ளத்தின் கூட்டு கால்வாய் ஆகுமே கால்வாயின் கூட்டு ஆற்றோடை ஆகுமே ஆற்றோடையின் கூட்டு கடலாகுமே அவற்றை எல்லாம் மனதில் நிறுத்துவோம். மேலும், (வேறு) துறப்போம் மறப்போம் விழிப்போம் நாட்டில்           துன்பம் எங்கும் பறக்கவே இனிப்பும் காரமும் வாழ்வின் சாரம்           இனிமை பொங்கிட வாழ்வோமே. இரவும் பகலும் நாட்டின் ஈரல்           இரவலும் கொடுத்தலும் நம் கடமையே தமிழின் பெருமை நாட்டின் பெருமை           தமிழர் கடமை இது வாகுமே.   சூரியனின் நன்மை நாட்டில் வெளிச்சம்    ...

பனித்துளிகள்

  விடிகின்ற காலையில் இமயம் சென்றேன்           விழிக்கின்ற இடமெல்லாம் பனித்துளிகள் கடந்தஇடம் காணா திகைத்து நின்றேன்           கழியுமிடம் தெரியுது அம்மட்டோ அடியேனைச் சுற்றிலும் அருமை நண்பர்           அடியேனை அன்பால் அரவணைத்தனர் பிடிவருமுன் னேமணி யோசை வருது           பணியாள்போகும் பின்னே துகள் வருது.   நானமைதியாய் அமர்ந்தேன் உன்னைச் சின்னாள்           நான்விட்டதில்லை என்றன வான்பூச்சிகள் வான்பூச்சியின் சத்தம் கேட்டு நாட்டில்           வான்மகளாய்த் தோன்றி னாள்பானு பூசையறையில் பருத்தஉரு ஒன்று வந்தால்           பூசாரிதான் என்ன செய்வானாம் பூக்குமேலையில் கதிரவன் வந்தால் யானோ புத்தாளன் என்ன செய்வேனாம்.

வானொலி

  வானொலி எங்கள் வானொலி           வான்புகழ் கொண்ட எங்கள் வானொலி வானொலி எங்கள் வானொலி           வண்ணமலர் வானொலி எங்கள் வானொலி வானொலி எங்கள் வானொலி           வாடாமலர் வானொலி எங்கள் வானொலி வானொலி எங்கள் வானொலி           சிங்கார வானொலி எங்கள் வானொலி வானொலி எங்கள் வானொலி           சின்னஞ்சிறு வானொலி எங்கள் வானொலி வானொலி எங்கள் வானொலி           சிந்திக்க வைக்கும் வானொலி எங்கள் வானொலி வானொலி எங்கள் வானொலி           சென்னைநகர் வானொலி எங்கள் வானொலி வானொலி எங்கள் வானொலி           செம்மைபடுத்தும் வானொலி எங்கள் வானொலி.

வந்த கடிதத்திற்கு

  ஏந்திழை எழுதிய ஏடுதனைக் கண்டேன் எழுத்தின் வடிவில் உன்மனம் கண்டேன் எழில்மிகு மால்விழியை எழுத்தில் கண்டேன் என்னுயிர் அதனில் உலவிடக் கண்டேன் என்மனக் கவலை உன்னிடம் சொல்ல எழுதிய கடிதங்கள் எழுத்தள வாகும் எழுதிய கடிதங்கள் முகவரி கண்டு எந்தையின் கையால் கிழிந்ததே மிச்சம் எந்தையின் கையில் நின்மடல் கிடைக்க என்று மில்லா தாண்டவம் அன்று என்மேனி தன்னில் புரிந்தன நன்று எண்சுவை விருந்தும் சேர்ந்தே வந்தது நெஞ்சம் மறவா கானல் வாழ்க்கை இரண்டு மாதம் வாழ்ந்து விட்டேன் கானில் கடந்த நிகழ்ச்சி தன்னை கணமும் நினைத்து உருகு கின்றேன் உடலை வாட்டிய நோய்தான் என்னை இரண்டு வாரம் படுக்க வைத்தது அந்நாள் தன்னில் வந்ததுன் கடிதம் பன்னாள், கண்ணில் தென்பட வில்லை பன்னிரு தேதியில் தந்தனள் மடலை படித்தறிந்து கொண்டேன் பாங்காள் நின்னை உன்மேல் கொண்ட கோபம் எல்லாம் கானலில் இரைத்த சிறுசீ ராயிற்று. அதனால் தானே, கோபம் மீதிட உன்முகம் காண ஓடோடி வந்தும் பைங்கிளி நின்னைப் பாராமல் வந்தேன் பாவியின் நெஞ்சினை நெருப்பில் பொசுக்கிட உன்கணை தன்னை மழையாய்ப் பொழிந்திடு உன்னைக் காண வாரம் இர...

உயர்ந்த நிலவு

  வான்மீது படமெடுத்து நிலவாடிய  போழ்தும் வண்ணமகள் மதிமயங்கி மாண்டாள் இல்லை கையிலிடா மாக்கோலம் விண்ணகத்தே போட்டிருக்க வீதியெங்கும் கைக்கோலம் விடிந்தவுடன் பிறப்பெடுக்கும்.   களையுதம்மா தெருக்கோலம் கால்தூசி படும்போழ்து அலையுதம்மா உன்கோலம் காரணம் இல்லாமலே. நனையுதம்மா மேகங்கள் உன் கருணையாலே முத்தங்கள் கொடுக்குதம்மா மாரியெனும் பெயராலே   தென்றலுன்னை தொட்டதில்லை தீஞ்சுவையும் சுவைத்ததில்லை கண்ணில்மட்டும் தெரிகின்றாய் இதமாய்நீ ஒளிர்கின்றாய் உறங்கும்போது என்மேனிப்பூ மயங்குதம்மா உன்ஜொலிப்பில் வரன்களைநீ பார்ப்பதுண்டு           வரன்களைக் கேட்பதில்லை.           கரங்களை நீ பார்ப்பதுண்டு           கரங்களுக்குள் அகப்படுவதில்லை சுரங்களில்நீ படிவதுண்டு           சுரங்கள் உனக்குக் கேட்பதில்லை.

மறக்க முடியுமா?

  மறக்க முடியுமா உன்னால் – என்னை மறக்க முடியுமா?   காலமெல்லாம் நானிருக்க – நீ           கண்கலங்கி நிற்பதேனோ? நாணமில்லை என்றுசொல்லி   - நீ           வனமாலை சூட்டிவாயேன்.   ஓசையினை நீயெழுப்பி           அசையாமல் வருவாயே ஆசையின் அலைகளிலே – உன்           ஆணவம் போனதோடி   கானலிலே நீரெழுப்பி – என்           தாகத்தைத் தீர்த்தாயே வாசலிலே கோலமிட           வாக்கப்பட வாயாண்டி   பூபாளம் பாடுகையில் – இந்தப்           பூலோகம் சிரிச்சதடி நேபாளம் வறண்டுவிட்டால்           பொட்டுவைக்க முடியாதடி.   வைச்சபொட்டு விழுந்துவிட்டால்        ...

உதவி வேண்டும்

  தமிழே தமிழே மயக்கம் தானோ தேனே தேனே இனிமை தாயேன் வானே வானே மழையைக் காணேன் தானே தானே ஏமாற்றந் தானே. இனிய இளமை எங்கே இங்கே இசையின் வடிவில் வளைந்து நின்றேன் கன்னித் தமிழைத் தேடித் தேடி இரவும் பகலும் அலைந்து திரிந்தேன் அழகை இழந்தேன் அறிவும் இழந்தேன். என், அரங்கேற்றம் அலையாய் ஆனால் கலையின் வடிவம் களைந்து போகும் நிலையாய் அதனை நிறுத்தி வைக்க உயிரைத் தந்தேன் உயிரை இழந்தேன். தமிழைக் காக்க நாவைக் காத்தேன் நாவின் சுவையை மறைத்து வைத்தேன் மறைத்த சுவையில் எறும்புகள் எல்லாம் ஊறிச் சுவைத்து உலுக்கி விட்டன. இனிய தமிழை இசையில் பரப்ப இயல முயன்றேன் இயல வில்லை மழலை வாயில் குழலை வைத்து மங்கும் தமிழை மணக்கச் செய்தேன். மணத்தைச் சுவைக்கும் நாசித் துளைகள் பண்பு கெட்டு இறந்து விட்டன. என்னிதயக் குமுறலை வெளியில் பரப்ப என்பேனா முனைக்கு வீரம் வந்தது வெற்றுத் தாள்கள் அலங்கரித்துக் கொண்டது வெளியில் வந்தது உலகை எரித்தது. அழகுத் தமிழில் நடன மாட தென்றல் காற்று இசைந்து வந்தது பந்தல் போட்டு அமைத்த மேடை வந்த புயலில் அடித்துச் சென்றது. கந்தைத் துணியால் வடிவம்...

தோழி

கடலோரம் கரைமோதும் அலையைப்போல           உன்நினைவலைதான் என்றென்றும் நெஞ்சினிலே உடலெல்லாம் அலங்கார ஊர்தியைப்போல்           எந்நெஞ்சக் குடிலில் அமர்ந்தவள்நீ அன்பிலே எனை நனைத்து           குளிரில் வாட்டியவள் நீ பண்பிலே எல்லாம் வென்று – என்           பண்ணிலே பொருளாய் நின்றாய்.   சொல்லிலே தாகம் வந்தால்           எழுத்திலே காட்டி நின்றாய் கண்ணிலே கண்ணீர் வந்தால் – அதில்           ஒரு துளியாய் நீயுமானாய் மண்ணிலே வாழும் எல்லாம்           மாண்புமிகு பெற்றார் இல்லை உன்னிலே சேர்ந்த பின்தான் – என்           மெய்யும் உயிரும் உயிர்பெற்றது.   இருகண்ணில் ஒருகண்ணாய்  ஆனவள்நீ     ...

நேற்று பூத்த மலரிது…

                                                                                            (பல்லவி)           வாழ்க்கைச் சோலையிலே           நேற்று பூத்த மலரிது. (பாட்டு)           அந்திவானம் சிவக்கையிலே                     அந்திரதம் மேற்கில் மறையும்           நந்தவன விளக்கெரிய                     இரவுரதம் ஓய்வெடுக்கும்           பொங்கும் அலைகூட           ...