முடிவு எடுப்போம்

 இரண்டு ஆண்டு காலத்திலே

          இருந்த இந்தப் பள்ளியிலே

பள்ளியின் மானம் நம்மிலே – அதைக்

          காப்பது நம் கையிலே

அதனால் சிந்திக்க நேரமில்லை

          சீரி எழுவோம் படிப்பினிலே

இருப்பதோ பன்னிரண்டு நாள்

          இழந்ததோ பன்னிரண்டு மாதம்

இருக்கும் நாள்நம் வாழ்வில்

          பொன்னாள் என்று கருதியே

ஒத்திருந்து படித்திட்டால்

          ஓங்கிடும் நம்பள்ளி பெருமை

முதலில் வந்திருக்கும் தேர்வில்

          முந்திக் கொண்டு எடுத்திடுவோம் மதிப்பெண்ணை

இழந்திட்ட காலங்களில்

          இருந்திட்டோம் பல வழிகளில்

இருக்கும் இந்தப் பொன்னான நாளிலே

          இனிப்பு வழக்கும் பொன்னாளிலே

இனிக்கும் செய்தி வழங்கிடுவோம் – வரும்

          அந்நாள் எங்கள் தேர்வு முடிவிலே.

 

அதுபோல,

பாரதி கண்ட கனவு என்ன?

          பாரம் எடுத்திட்ட காரணம் என்ன?

பாரில் பிறந்திட்ட பயன் என்ன?

          பாடம் கற்பிக்கும் நேரம் என்ன?

என்று ஏங்கிட்ட பாரிதி யவர்கள்

          எழுதிட்டார் அழகு எழுத்தக்களை

பாடினார் இனிமை குரலிலே

          எழுந்திட்டார் இந்திய மக்கள்

பறந்திட்டான் பாட்டாளி மக்கள்

          பாரதி கண்ட கனவெல்லாம்

பாழ்பட்டு போய் விடாமல்

          பாழாது காப்பது நம்கடமையே

இக்கருத்தை மனதில் கொண்டு

          பள்ளியின் பெருமையைக் காப்போமே.

Comments

Popular posts from this blog

என்னில் வாழ் குமர குருபரா

பனித்துளிகள்