வந்த கடிதத்திற்கு
ஏந்திழை எழுதிய ஏடுதனைக் கண்டேன்
எழுத்தின் வடிவில்
உன்மனம் கண்டேன்
எழில்மிகு மால்விழியை
எழுத்தில் கண்டேன்
என்னுயிர் அதனில்
உலவிடக் கண்டேன்
என்மனக் கவலை
உன்னிடம் சொல்ல
எழுதிய கடிதங்கள்
எழுத்தள வாகும்
எழுதிய கடிதங்கள்
முகவரி கண்டு
எந்தையின் கையால்
கிழிந்ததே மிச்சம்
எந்தையின் கையில்
நின்மடல் கிடைக்க
என்று மில்லா
தாண்டவம் அன்று
என்மேனி தன்னில்
புரிந்தன நன்று
எண்சுவை விருந்தும்
சேர்ந்தே வந்தது
நெஞ்சம் மறவா
கானல் வாழ்க்கை
இரண்டு மாதம்
வாழ்ந்து விட்டேன்
கானில் கடந்த
நிகழ்ச்சி தன்னை
கணமும் நினைத்து
உருகு கின்றேன்
உடலை வாட்டிய
நோய்தான் என்னை
இரண்டு வாரம்
படுக்க வைத்தது
அந்நாள் தன்னில்
வந்ததுன் கடிதம்
பன்னாள், கண்ணில்
தென்பட வில்லை
பன்னிரு தேதியில்
தந்தனள் மடலை
படித்தறிந்து
கொண்டேன் பாங்காள் நின்னை
உன்மேல் கொண்ட
கோபம் எல்லாம்
கானலில் இரைத்த
சிறுசீ ராயிற்று.
அதனால் தானே,
கோபம் மீதிட
உன்முகம் காண
ஓடோடி வந்தும்
பைங்கிளி நின்னைப்
பாராமல் வந்தேன்
பாவியின் நெஞ்சினை
நெருப்பில் பொசுக்கிட
உன்கணை தன்னை
மழையாய்ப் பொழிந்திடு
உன்னைக் காண வாரம்
இருமுறை
உன்னைடி வந்தும்
உன்னெழில் உருவம்
உளவிடக் காணேன்.
உற்றது உள்ளம்
மாயை நெஞ்சை அங்கே
விட்டு
மானிடன் போல்
மண்ணிடை உலவ
பைத்தியக் காரன்
என்றொரு பெயரைப்
Comments
Post a Comment