நேற்று பூத்த மலரிது…
(பல்லவி)
வாழ்க்கைச் சோலையிலே
நேற்று பூத்த
மலரிது.
(பாட்டு)
அந்திவானம் சிவக்கையிலே
அந்திரதம் மேற்கில் மறையும்
நந்தவன விளக்கெரிய
இரவுரதம் ஓய்வெடுக்கும்
பொங்கும் அலைகூட
பொருமையோடு கரைமோதும்
அமாவாசை நன்னாளில்
பூத்ததந்த புதுமலர்.
(வாழ்க்கைச்)
முகம்பார்க்க
துடித்த தாய்க்கு
மின்மினிதான்
ஒளி தந்தது
அகம்பார்த்து
பேசாமல்
புறம்பார்த்துத்
தூற்றிவிட்டார்.
பெத்தெடுத்த
தாயிக்கோர்
தங்கமாச்சு
அக்குழந்தை
சோறூட்ட
தங்கத் தட்டில்லை என்றாலும்
பாராட்ட
வாயுண்டு.
(வாழ்க்கைச்)
ஏட்டுக்கலை
யறியாதவன் – ஆனால்
அவன்
நாட்டுக்கலை யறிந்தவன்
தோள்மேலே
தோள் சுமந்து
சோதனையை
மேல்சுமந்தான்
சோதனையோ?
வாழ்வு எண்ணி
வேதனையாய்
வெந்து போனான்
வெந்த
புண்ணு ஆறக்குள்ளே
சொந்தப்
பிள்ளை பிறந்துவிட்டான்.
(வாழ்க்கைச்)
காப்பாத்த
வழியுமில்லை
சாப்பாட்டுக்கு
எப்பவும் தொல்லை
வாய்ப்பாட்டு
பாடவில்லை
வாய்திறந்தால்
பேச்சுமில்லை
காய்த்தமரம்
பழுக்கவில்லை
பழுத்தகனியும்
கிடைக்கவில்லை
இத்தனையும்
தாம்பெற்று
இருந்தொரு
குழந்தைபெற்றான்.
(வாழ்க்கைச்)
காலை
இளம் பரிதியிலே
நாளும்
வரும் தென்றலோடு
சாலை
யோர மரநிழலில்
ஏணை
கட்டி போட்டிருக்கும்
தாலாட்ட
கைகள் இல்லை
பாலூட்ட
ஆளுமில்லை
விளையாட
யாருமில்லை
பசித்த
வேளைக்கு உணவுமில்லை.
(வாழ்க்கைச்)
அழுதழுதும்
தூங்கவில்லை
அழநினைத்தாலும்
முடியவில்லை
அநாதையா
அக்குழந்தை
பகலெல்லாம்
தவிக்கின்றது
களைப்பான
அகத்துக்கோர்
கலைப்பொருளாய்
இருக்கின்றது
நாளைய
பிரிவை எண்ணி
இப்பவும்
சேர்த்தே யழுகுது.
(வாழ்க்கைச்)
Comments
Post a Comment