மறக்க முடியுமா?
மறக்க முடியுமா உன்னால் – என்னை
மறக்க முடியுமா?
காலமெல்லாம் நானிருக்க
– நீ
கண்கலங்கி நிற்பதேனோ?
நாணமில்லை என்றுசொல்லி - நீ
வனமாலை சூட்டிவாயேன்.
ஓசையினை நீயெழுப்பி
அசையாமல் வருவாயே
ஆசையின் அலைகளிலே
– உன்
ஆணவம் போனதோடி
கானலிலே நீரெழுப்பி
– என்
தாகத்தைத் தீர்த்தாயே
வாசலிலே கோலமிட
வாக்கப்பட வாயாண்டி
பூபாளம் பாடுகையில்
– இந்தப்
பூலோகம் சிரிச்சதடி
நேபாளம் வறண்டுவிட்டால்
பொட்டுவைக்க முடியாதடி.
வைச்சபொட்டு விழுந்துவிட்டால்
வாழ்க்கையிலே இன்பமேது
ஈரமில்லா இரத்தமானால்
உயிரோட்டம் எங்கிருக்கும்?
நெஞ்சில் என்
கதையெழுதி
நெய்விளக்கில் படித்தாயே
நெய்மணக்கும்
வாசனையில்
எனைமறந்து போறாயோ?
எனைமறந்து போனாலும்
நெஞ்சமதை மறவாது
என்ன மறைத்தாலும்
உன்னாலது முடியாது.
கண்வெறுத்து மூடினாலும்
கண்ணுள்ளே இருப்பேனே
மனம்வெறுத்துப்
போனாலும்
ஆல்விழுதாய் ஆவேனே.
Comments
Post a Comment