தோழி

கடலோரம் கரைமோதும் அலையைப்போல

          உன்நினைவலைதான் என்றென்றும் நெஞ்சினிலே

உடலெல்லாம் அலங்கார ஊர்தியைப்போல்

          எந்நெஞ்சக் குடிலில் அமர்ந்தவள்நீ

அன்பிலே எனை நனைத்து

          குளிரில் வாட்டியவள் நீ

பண்பிலே எல்லாம் வென்று – என்

          பண்ணிலே பொருளாய் நின்றாய்.

 

சொல்லிலே தாகம் வந்தால்

          எழுத்திலே காட்டி நின்றாய்

கண்ணிலே கண்ணீர் வந்தால் – அதில்

          ஒரு துளியாய் நீயுமானாய்

மண்ணிலே வாழும் எல்லாம்

          மாண்புமிகு பெற்றார் இல்லை

உன்னிலே சேர்ந்த பின்தான் – என்

          மெய்யும் உயிரும் உயிர்பெற்றது.

 

இருகண்ணில் ஒருகண்ணாய்  ஆனவள்நீ

          மறுகண்ணில் தூசுவிழுந்தால் துடைத்தவள்நீ

என்னிலொரு நட்சத்திரமாய் தோன்றினவள்நீ

          மென்மையிலொரு மலராய்  பூத்தவள்நீ

வருகையிலே நிழலென வந்தவள்நீ – என்

          வறுமையிலும் பங்கேற்றுக் கொண்டவள்நீ

சமத்துவத்தில் சன்மார்க்கம் கண்டவள்நீ

          சமதர்மம் வாழ்ந்திடவே முழங்கியவள் நீ.

Comments

Popular posts from this blog

என்னில் வாழ் குமர குருபரா

பனித்துளிகள்

முடிவு எடுப்போம்