உயர்ந்த நிலவு
வான்மீது படமெடுத்து
நிலவாடிய போழ்தும்
வண்ணமகள் மதிமயங்கி
மாண்டாள் இல்லை
கையிலிடா மாக்கோலம்
விண்ணகத்தே போட்டிருக்க
வீதியெங்கும்
கைக்கோலம்
விடிந்தவுடன்
பிறப்பெடுக்கும்.
களையுதம்மா தெருக்கோலம்
கால்தூசி படும்போழ்து
அலையுதம்மா உன்கோலம்
காரணம் இல்லாமலே.
நனையுதம்மா மேகங்கள்
உன் கருணையாலே
முத்தங்கள் கொடுக்குதம்மா
மாரியெனும் பெயராலே
தென்றலுன்னை தொட்டதில்லை
தீஞ்சுவையும்
சுவைத்ததில்லை
கண்ணில்மட்டும்
தெரிகின்றாய்
இதமாய்நீ ஒளிர்கின்றாய்
உறங்கும்போது
என்மேனிப்பூ
மயங்குதம்மா உன்ஜொலிப்பில்
வரன்களைநீ
பார்ப்பதுண்டு
வரன்களைக்
கேட்பதில்லை.
கரங்களை
நீ பார்ப்பதுண்டு
கரங்களுக்குள்
அகப்படுவதில்லை
சுரங்களில்நீ
படிவதுண்டு
Comments
Post a Comment