உதவி வேண்டும்
தமிழே தமிழே மயக்கம் தானோ
தேனே தேனே இனிமை
தாயேன்
வானே வானே மழையைக்
காணேன்
தானே தானே ஏமாற்றந்
தானே.
இனிய இளமை எங்கே
இங்கே
இசையின் வடிவில்
வளைந்து நின்றேன்
கன்னித் தமிழைத்
தேடித் தேடி
இரவும் பகலும்
அலைந்து திரிந்தேன்
அழகை இழந்தேன்
அறிவும் இழந்தேன்.
என், அரங்கேற்றம்
அலையாய் ஆனால்
கலையின் வடிவம்
களைந்து போகும்
நிலையாய் அதனை
நிறுத்தி வைக்க
உயிரைத் தந்தேன்
உயிரை இழந்தேன்.
தமிழைக் காக்க
நாவைக் காத்தேன்
நாவின் சுவையை
மறைத்து வைத்தேன்
மறைத்த சுவையில்
எறும்புகள் எல்லாம்
ஊறிச் சுவைத்து
உலுக்கி விட்டன.
இனிய தமிழை இசையில்
பரப்ப
இயல முயன்றேன்
இயல வில்லை
மழலை வாயில் குழலை
வைத்து
மங்கும் தமிழை
மணக்கச் செய்தேன்.
மணத்தைச் சுவைக்கும்
நாசித் துளைகள்
பண்பு கெட்டு
இறந்து விட்டன.
என்னிதயக் குமுறலை
வெளியில் பரப்ப
என்பேனா முனைக்கு
வீரம் வந்தது
வெற்றுத் தாள்கள்
அலங்கரித்துக் கொண்டது
வெளியில் வந்தது
உலகை எரித்தது.
அழகுத் தமிழில்
நடன மாட
தென்றல் காற்று
இசைந்து வந்தது
பந்தல் போட்டு
அமைத்த மேடை
வந்த புயலில்
அடித்துச் சென்றது.
கந்தைத் துணியால்
வடிவம் கொண்ட
போர்வைக் குள்ளே
ஒளிந்துக் கொண்டு
அழகு முகத்தைக்
கொஞ்சம் காட்டி
கொஞ்சும் போது
விஞ்சி விட்டது.
பிறந்த குழந்தை
வளர்ந்து விட்டது
மழலை மொழியும்
மறைந்து விட்டது
தொட்டில் இன்னும்
மாற வில்லை
பிறந்த தமிழும்
புகழடைய வில்லை.
இளையவன் இன்று
முதியவ னானான்
இளமைத் தமிழோ
அவன்வாயில் பிறந்து
முதுமை பெற்றும்
கன்னித் தமிழாய்
மண்ணில் வாழ்ந்தாள்
மயங்கி இருந்தாள்.
ஊமைக் குயிலாய்
புகழை இழந்தாள்.
அழகைக் கண்டேன்
உள்ளம் கொண்டேன்
நாவில் வைத்தே
எப்புறமும் பரப்புவேன்
உள்ளம் கொண்டோர்
உருக்கம் உள்ளோர்
எண்ணிப் பாரும்
கன்னித் தமிழை
உதவி புரிவோர்
தமிழன் என்பேன்
மற்றவ ரெல்லாம்
சிங்கள னென்பேன்.
Comments
Post a Comment