நான் இப்படி
தென்றலுக்கு அழைப்புக் கொடுத்து
சுவாசிக்க மறந்து விட்டேன்
தமிழுக்கு உன்னத
உயிர்கொடுத்து
என்னுயிரை மறந்து விட்டேன்
நினைவிற்குக்
கல்லறை கட்டி
நித்திரைக்குத் தவித்து நின்றேன்
வாழ்க்கைக்கு
வழியைத் தேடி
வகையே யில்லாமல் அலைகின்றேன்.
Comments
Post a Comment