கண்மணி என் கண்மணி

 

உன்னைப் புரிஞ்சிக்கிட்டேன்

உண்மை தெரிஞ்சிக்கிட்டேன்

                              கண்மணி என் கண்மணி

மாயை மறைஞ்சிருச்சி

மனசும் தெளிஞ்சிருச்சி

                              கண்மணி என் கண்மணி

பூமியெல்லாம் பூவின் வாசம்

இங்கே இல்லை உண்மை நேசம்

 

தேடினேன் என்னைத் தேடினேன்

          உன்னில் காணலே

பாடினேன் உன்னைப் பாடினேன்

          பொய்யாய்ப் போனதே

 

காற்றில் அணையுமின்னு

          கையை வச்சி மறச்சேன்

கைகள் சுட்டாலும்

          பொறுத்துகிட்டு கிடந்தேன்

                              கண்மணி என் கண்மணி

 

பார்க்கும் இடம் எல்லாம்

பாவை உன்னைக் கண்டேன்

பேதை போல அன்று

போதையில் நான் சொன்னேன்

          உண்மைதான் அது உண்மைதான்

அந்த நேசம் அன்று

மாயம் தான் மாயம் தான்

                              உணர்ந்தேன் அதை இன்று

          காதல் என்ற சொல்லுக்கு

          மாசு வந்து சேர்ந்தது

                                        கண்மணி என் கண்மணி

          தெய்வீகச் சொல்லுக்கு ஒரு

          பகை வந்து சேர்ந்தது

                                        கண்மணி என் கண்மணி.

Comments

Popular posts from this blog

என்னில் வாழ் குமர குருபரா

பனித்துளிகள்

முடிவு எடுப்போம்