பொங்கல் வாழ்த்து

             கதிர்க்காற்றை பதர்த்தூற்ற

அதிர்கல்லில் உதிர்செய்து

          குதிரெழுப்பு சதிராக்கி

                    அதிகாலை கதிர்முன்னே

          கதிர்விரித்து நீர்போக்கி

                    உரல்குத்தால் உமிழ்போக்கி

          பதிபானை அழகிட்டு

                    அதில்பாதி அரிசியிட்டு

          உதிர்பாதி நீரிட்டு

                    கதிர்ஊறும் வாசல்மேல்

          மதிவிறகு தியாகத்தால்

                    உதிரரிசி உறவு கொள்ளும்

          கொதிபானை வழிந்தோட

                    பொங்கலோ பொங்கலென

          பதியான நிறைவாழ்வு

                    நித்தம்பெற வாழ்த்துகின்றேன்.

Comments

Popular posts from this blog

என்னில் வாழ் குமர குருபரா

பனித்துளிகள்

முடிவு எடுப்போம்