மானம்

 


துரியோ தனன்கை துடியிடை நங்கையின்

தறிபொருள் பற்றது பறிபோ முன்னே

பாஞ்சா லிமனமோ பெதும்பை யாகி

நிழல்தரு மரமாய் நித்திரை இருக்கும்

இழைதுயில் காரன் இமையுள் பெயரான்

கண்ணன் என்போன் கண்திற வேண்டி

கண்ணா கண்ணா கண்ணா என்று

கானமும் வானமும் காதிடை நுழைய

உதவிக் கண்ணனை உதவிட அழைத்தாள்.

அலையது மீதில் அழுத்தக் காற்று

அழுத்திய உடனே எழுகிற புயல்போல்

துயிலும் கண்ணனை கயிலெழச் செய்தது

பத்தினிக் குரலிவ் பாரத நாட்டில்

எத்தனைக் குரலிங் கெழுந்தென் பயனோ

இத்துணை நாட்டின் இணைதுளைக் காரன்

எத்துனை நாளாய் எழுப்பியே உள்ளான்.

காந்தள் நிலமோ காவலாய் இருக்க

மேலும் அங்கே, மாந்தர் அங்கே

நாளும் நாளும் நித்திரை ஒழிப்பர்.

சாகும் இலங்கை புள்ளியர் கூட்டம்

காக்கும் கற்பை கருகச் செய்யும்

கடுவன் கூட்டமும் காவலாய் இருக்கும்

ஒருமொழிக் காரன் இருந்தென் பயனோ?

கருமொழி யங்கே வெறுமென் றபோது

இருளில் காத்த இருவிழி மானம்

பகலில் ஒருசிறு பற்றுத் தேடும்

இதுதான் எங்கள் இந்திய நாட்டின்

வறுமைக் கோட்டின் அட்சக் கோடு

அயலான் வருகை, அருந்தமிழ் மொழியாள்

அரைகுறை யாடை அணிந்திட துணிந்தாள்

அதனால்,

காளையர் உள்ளம் காமம் கொள்ள

கரையோ ரச்சிலைகள் கற்பினை இழக்கும்

தமிழ்மொழி நாட்டில் தாழ்ந்தவன் மொழிகள்

அமிழ்தே என்றால், ஆனந்த மொழியோ

அரும்பிய இடமும் அடியின்றிப் போகும்

பிறந்தார் நாட்டை மறந்த போது

இங்கது புகுதல் தடையிலா நிகழ்ந்தது.

மொழியின் மானம் காப்பதாய்ச் சொல்லி

வழிவழி அன்பரும் உருவழி வதிங்கே.

தெருவழி நாய்கள் துணிந்திடும் செயலும்

நிலைபொருள் மாந்தர் நீக்கினா ரில்லை.

அலைகூட இங்குக் கரைமோ தும்போது

வரிகேட் டிங்கு வரிசையில் இருப்பர்.

திரைவேண்டி பெண்கள் சிறைக்குள் சென்றாலும்

மறைவில் கற்பு குறைவிலா பெறுவர்.

இவர்கள்தான்,

இந்திய நாட்டை இயங்கிட வைக்கும்

அந்நிலக் கூலியால் அடிமைப் படைகள்

இவனது வீட்டில் இல்லை என்றாலும்

இந்திய மண்ணின் தன்மை காப்பான்

அவனது வீடோ அந்நியர் படையால்

மோக மருந்தில் தேகம் இழப்பர்

இதுவா மானம் இதுவா மானம்

மானம் இங்கே போகும் போது

வானம் கூட வாழ்த்த மறுக்கும்

தாகம் என்று தண்ணீர் கேட்டால்

சோக கீதம் சோலை யோரம்தான்

நாட்டில்,

மானம் காத்தால் மதிப்பர் என்றும்

இல்லையேல்,

வானம் கூட விரட்டி உதைக்கும்.

Comments

Popular posts from this blog

என்னில் வாழ் குமர குருபரா

பனித்துளிகள்

முடிவு எடுப்போம்