பவள நெஞ்சம்

 

பஞ்சம் இல்லை நாட்டிலே

            வஞ்சம் இல்லை வீட்டிலே

நெஞ்சம் கொண்டு சொல்லிடுவார்

            தஞ்சம் அடைவார் தாசியிடம்.

 கொஞ்சம் வேண்டு மென்றே

          லஞ்சம் ஒன்றை வாங்கிடுவார்

கொடுத்ததைக் கேட்டு வந்தால்

          கொலை யொன்றைச் செய்திடுவார்.

 நாட்டிலே பஞ்சம் என்றிடுவார்

          வீட்டிலே ஊஞ்சல் ஆடிடுவார்

நேர்மை யில்லை அவரிடம்

          பேர்மை வேண்டியே

நெஞ்சை விட்டுப் பேசிடுவார்

                          நெஞ்சில் துணிவு இல்லாமலே.

Comments

Popular posts from this blog

என்னில் வாழ் குமர குருபரா

பனித்துளிகள்

முடிவு எடுப்போம்