சென்னை பச்சையப்பன்

 


        பச்சை யப்பன் பெயரைக் கேட்டால்

பசுமை நெஞ்சில் படர்ந்திட வேண்டும்

          எச்சில் காற்று இப்பக்கம் வந்தால்

                    எச்சரிக்கைப் பலகை வாலில் தொங்கும்

          நச்சிடைப் பேச்சே எச்சரிக்கை யாகும்

                    துப்பிடும் எச்சிலே எச்சிலைத் துறத்தும்

          எச்சிலே வீரமென்றால் மற்றத்தில் ஈங்கு…

                    கேட்டிடல் தகைசால் விருந்து ஆமோ?

 

          பச்சையப்பன் மண்ணைத் தொட்டாலே போதும்

                    பாரினில் பயணம் செய்த தாகும்

          பச்சையப்பர் பலபேர் இங்கே சிவப்பு

                    கொடிதூக்கி சிலந்திப் புழுவாய் வாழுகின்றார்

          எட்டை யப்பன் எட்டிப் பார்த்தால்

                    பச்சை யப்பன் வெட்டிப் பார்ப்பான்

          நிட்டை யப்பன் தூங்கும் போதும்

                    சட்டை யப்பன் எதிர்த்து நிற்கும்.

 

          பச்சையப்பன் பேச்சே சட்டமது ஆச்சு

                    எச்சிலிட்ட காற்றும் செந்தமிழ்ப் பேச்சாச்சு

          பச்சையப்பன் காட்டில் புல்லாங்குழல் உண்டு

                    இச்சிக்கின் அதுவே வாளா வதுண்டு

          பச்சையப்பன் தொல்லைகள் பட்டது இல்லை

                    விட்டதில்லை வந்த வலிய தொல்லை

          சத்தாறு இங்கே திரண்டோட கல்விப்

                    பித்தாறு கொண்டில் ஓட்டிடும் பாரு…

Comments

Popular posts from this blog

என்னில் வாழ் குமர குருபரா

பனித்துளிகள்

முடிவு எடுப்போம்