தன்மானம்?
தாமரை என்னைத்
தாக்கிய போழ்தும்
தரணியில்
எந்நிலை தாழ்ந்த தில்லை
மாமழை
என்னை நனைக்கும் போழ்தும்
மதிகெட
வொருநாளும் நினைத்த தில்லை
பூவிழி
அர்ச்சனை நிகழ்த்திய போழ்தும்
பூவைமீ
தெனக்கு கரிசன மில்லை
மாபதி
தட்சணை யொன்றே போதும்
மாலைகள்
எனக்கு வேண்டிய தில்லை.
அடிமா
டாயீங் கிருந்தது போதும்
ஆடிமா
தமுனை அணைத்திட வருவேன்
பிடிமா
னாய்யென் கைக்குள் இருந்தால்
நாடிக்
குள்உன் மூச்சினை வைப்பேன்.
செடிமா
திரியென் நலன்களைக் கவனித்தால்
பாவையுன்
நலனே பெரிதென நினைப்பேன்
கொடிமா
திரியுன் பாசவலை இருந்தால்
கோடுகள்
வாழ்வாய் மகிழ்ந்து இருப்பேன்.
செல்வம்
கோடி செழிக்கும் போழ்தும்
செருக்கு
உன்னிடம் இருந்திடல் கூடாது
சொல்வர்,
கோடி சொல்லும் போழ்தும்
கொள்கை
வாழ்வாய் இருந்திடல் வேண்டும்
தோளெவ்
சுமைதனை சுமந்திடும் போழ்தும்
வலிதனை
வெளியே சொல்லுதல் கூடாது
தேளாய்
வார்த்தைகள் கொட்டிய போழ்தும்
தேனாய்
ஏற்று சுவைத்திடல் வேண்டும்.
பக்தி
யிலென்மனம் படகோட்டிச் செல்ல
சக்திக்கு அதுவே நிலையாய் ஏற்றேன்.
முக்திக்
கதுவே முடிவென நினைத்து
அக்கா
ரியம்நடக்க என்மனம் நிற்கும்
என்மனம்
உன்னை விலக்கிட லாகா
உன்மனம்
என்னை விலக்கிடல் வேண்டும்
உன்மனம்
என்னை அழைத்தது என்றால்
தன்மானம்
இனிநான் விற்றாக வேண்டும்.
Comments
Post a Comment