நற்பயனை நாடு

             அன்பென்னும் கரையைக் கட்டி

பாசத்தை ஓட விட்டேன்

          துன்பம்தான் கதையைச் சொல்ல

                    இன்பத்தை விரட்டி விட்டேன்

          கண்ணுக்கள் கதையை வைத்து

                    இமையினைச் சொல்லச் சொன்னேன்

          கண்ணிரு பட்ட தாலே

                    வைச்சகதை அழிந்து போச்சே.

 

          சத்தியத்தை உணவாய் உண்ணும்

சமத்துவத்தைப் பேசும் கண்ணே

          தத்துவத்தை நிலையாய் எண்ணி

                    சிந்தையூற பாடு பெண்ணே

          நித்திரைக்கு விலங்கு பூட்டி

                    சந்தையிலே விற்பாய் கண்ணே – அதைச்

          சித்திரத்தில் சிற்பம் செய்து

                    சிந்திக்க வைப்பாய் தொன்னே.

 

          கந்தையிலே கிழிசல் உண்டு

சிந்தையிலே இல்லை எண்ணி

          விந்தையிலே உலகை ஆளும்

                    வியப்புமிக்க ஆளாய் ஆவாய்

          ஒற்றுமையில் இருகரம் சேர்த்து

                    குற்றமிலா குடும்பம் அமைக்க

          கற்பனையை ஒழித்து விட்டு

                    நற்பயனை நாடு வாயே.

Comments

Popular posts from this blog

என்னில் வாழ் குமர குருபரா

பனித்துளிகள்

முடிவு எடுப்போம்