குழந்தை
குழந்தை நல்ல
குழந்தை
கூடி விளையாடும் குழந்தை
குச்சி மிட்டாய்
வாங்கிக் கொடுத்தா
குழைந்து பேசும் குழந்தை.
சின்ன பொம்மை
வேண்டுமென்று
சீண்டி நம்மை எழுப்பிவிட்டு
கலக்க லோடு பேசியே
கலகலவென்று சிரித்திடும்.
அம்மா வேண்டு
மென்று
அடம்பிடித்து நின்றிடும்
சும்மாயிரு என்றிட்டால்
அடைத்திடும் நம்காதுகளை.
துள்ளிவரும் கன்றைப்
பார்த்து
அ-ம(ல்)லியில் எழுந்திடும்
துரத்தியதைச்
சென்றே
தூக்கத்தை விரட்டிவிடும்.
அண்மையில் வரும்
அன்னம்போல
ஆடிவரும் அசைந்துவரும்
தரையில் ஒன்றைக்
கண்டிட்டால்
தாழ்ந்து அதையெடுத்திடும்.
விளக்கு ஒன்றைக்
கண்டிட்டே
வீம்புக்குச் சென்றிடும்
நமக்கு என்று
எடுத்திடும்
வீலென்று அழுதிடும்.
நிலவுக்கு அழைப்புக்
கொடுத்து
நிலவு முற்றத்தில் நின்றிட்டால்
நிலைமை மாறிப்
பேசிடும்
நீல முகத்தோடு சிரித்திடும்.
அப்பா அப்பா என்றே
தப்பாமல் கூப்பிடும்
அல்வா வாங்கிக்
கொடுத்தா
முத்தம் மாரி கொடுத்திடும்.
இரண்டு வயதில்
ஆடும் ஆட்டம்
இரட்டிப்புச் சந்தோசம்
இருட்டி விட்டால்
போதும்
இருநிலவாய்த் தோன்றிடும்.
முத்துப்பல் தெரிய
முன்னூறு முறை சிரித்திடும்
மூவுலகம் எனதென்று
வாயில், பூலோகம் காட்டிடும்.
மணிமுத்து மாலை
சூட்டிட்டால்
மணிமணிமாய் ஆடிடும்
தென்றலில் ஆடுகின்ற
Comments
Post a Comment