தன்னினம்
தங்கவந்து இடம்பிடிக்கும் பந்தி
தமிழன்னை
சுவைதனைச் சிந்தி
அங்கிருந்து
தடம்புரலும் மந்தி
இங்குதானே
இதம்தேடும் முந்தி
எங்கிருந்து
வந்தாலும் சந்தி
மாறாமல்
வரவேற்கும் நந்தி
இங்கிருந்து
இருந்ததைச் சிந்தி
அப்புறம்
இங்கேது இந்தி.
முந்தி யடிக்குது
பின்தியடிக்குது
எந்தன்
மனம் குயிலே – அது
சிந்தி
முடிக்குது என்னை இடிக்குது
கந்தன்
மனம் மயிலே – இதை
மந்தி
யெடுக்குது தந்தி கொடுக்குது
உந்தன்
இனம் ஒயிலே – அது
உந்தி
விடுக்குது பந்தி கொடுக்குது
தந்தன் இனம் உயிலே.
Comments
Post a Comment