ஏக்கத்திலே...

 


அரிசி இருக்கு அருகில் இருக்கு

          அரைக்க முடியலே

பருப்பு இருக்கு பருத்து இருக்கு

          பார்க்க முடியலே

வானம் இருக்கு மேகம் இருக்கு

          மழையைக் காணலே

பகல் இருக்கு இரவு இருக்கு

          பானுமதியைக் காணலே

பேனா இருக்கு இங்க் இருக்கு

          எழுத முடியலே

சொல் இருக்கு வார்த்தை இருக்கு

          பேச முடியலே

எண்ணம் இருக்கு எண்ணி இருக்கு

          நினைக்க முடியலே

பார்த்துப் பார்த்து வந்த இந்த

          நிலவைக் காணலே

தேடித் தேடிச் சென்ற எந்தன்

          மனமும் ஏக்கத்திலே.

Comments

Popular posts from this blog

என்னில் வாழ் குமர குருபரா

பனித்துளிகள்

முடிவு எடுப்போம்