நிலை நாட்டு
ஆடிவரும் தென்றலைக்
கண்டேன் – அத்துடன்
அசைந்துவரும் பெண்ணைக் கண்டேன்
பாடிவரும் குயிலைக்
கண்டேன் – அத்துடன்
ஆடிவரும் மயிலைக் கண்டேன்
கரைமோதும் அலையைக்
கண்டேன் – அத்துடன்
காத்திருந்த இருவிழிகளைக் கண்டேன்
உதிக்கும் சூரியனைக்
கண்டேன் – அத்துடன்
மறையும் அதனழகைக் கண்டேன்.
ஒளிவீசும் அழகைக்
கண்டேன் – அத்துடன்
ஒளிர்ந்திடும் பயிர்வளத்தைக் கண்டேன்
வீசிடும் தென்றலைக்
கண்டேன் – அத்துடன்
வீழ்ந்திடும் மழையையும் கண்டேன்
பெருகியோடும்
ஆற்றைக் கண்டேன் – அத்துடன்
பெருகிவரும் மக்களைக் கண்டேன்
ஓடிவரும் மழலையைக்
கண்டேன் – அத்துடன்
ஒளிந்துக் கொள்ளும் அழகைக் கண்டேன்.
ஓடிவரும் எலியைக்
கண்டேன் – அத்துடன்
ஒழித்துவிடும் பூனையையும் கண்டேன்
சுத்திவரும் பூனையைக்
கண்டேன் – அத்துடன்
காத்திருக்கும் நாயையும் கண்டேன்
ஆப்பம் திண்ணகதை
கேட்டேன் – அத்துடன்
நாடு காக்கும் முறையைக் கண்டேன்
ஏப்பமிடும் மனிதரைப்
பார்த்தேன் – அத்துடன்
ஏமாந்து நிற்கும் மனிதரைக் கண்டேன்.
Comments
Post a Comment