பிள்ளை போற்றி
நிலையாம் குறிக்கோள் செங்கோல் கொண்டு
இலையாம்
பிணியை விரட்டி நிற்பாய்
கலையாம்
தமிழினை மலையெனப் போற்றி
தலையெனச்
சொல்லி தரணியில் பரப்பு
சிலையெனத்
தலைவன் சிலுவையில் தூங்க
அலையென
மொழிகள் ஆக்கிப் போற்று
வலையாய்
அருள்கள் வல்லவன் அருள
பிளையாய்
இருந்து புகழைப் பாடு.
கண்ணுக்குத்
தெரியும் கனிபொரு ளெல்லாம்
உண்டா
லன்றோ இன்சுவை தெரியும்
கண்ணுள்
பிம்பம் தெரிந்தா லன்றோ
கண்கவர்
பொருளை உணர முடியும்
எண்ணிய
தெல்லாம் செயல்பட வென்றால்
எண்ணக்
கடவுளை தினமும் பாடு
எண்ணம்
செழிக்கும் இந்த நாளில்
எண்ணியன்
இவனும் வாழ்த்து கின்றேன்.
Comments
Post a Comment