இறம்பும் சிரிப்பும்
முத்துச் சிரிப்போ முல்லை விரிப்பு
கண்ணின் திறப்போ
எந்தன் தவிப்பு
எந்தன் நட்போ
உந்தன் நினைப்பு
எந்தன் படிப்போ
உந்தன் குறிப்பு.
கரையான் அரிப்போ
உன்கை பிறப்பு
உந்தன் பார்ப்போ
எந்தன் கொதிப்பு
கதிரவன் உதிப்போ
நிலவின் மறைப்பு
வயலின் செழிப்போ
வயலின் இசைப்பு.
கனியின் பறிப்போ
உன்னிதழ் சிவப்பு
உயிரின் துடிப்போ
உன்னெழில் நினைப்பு
வறட்சியின் பிறப்போ
உந்தன் மறுப்பு
வறுமையின் செழிப்போ
அன்பின் இழப்பு
முத்தின் மினுப்போ
உந்தன் ஜொலிப்பு
அறிவின் உதிப்போ
உன்கலை சிறப்பு
என்னுயிர் பிரிப்போ
உந்தன் பொறுப்பு
உந்தன் நினைப்பே
என் இறப்பிலும் சிரிப்பு.
Comments
Post a Comment