ரோடு ரோலர்

 உருண்டோடும் ரோடு ரோலர் – நெஞ்சில்

உறவாடும் ரோடு ரோலர்.

 

கற்பனை நயத்திலும் கல்லார் மனதிலும்

          கருப்பொருளாய் நிலைக்கும் எங்கள்

                                        (உருண்டோடும்)

கருத்துக்கள்  மேலோங்கி கருப்புக்கள் கீழிறங்கி

          உரிப்பொருளாய் நிற்கும் – எங்கள்

                                        (உருண்டோடும்)

எரிமலை வெடித்தாலும்  இமயம் மறைந்தாலும்

          உயிரோடு வந்துவிடும் – எங்கள்

                                        (உருண்டோடும்)

கட்டிக் கொடியில்லை பச்சாதாபமில்லை

          வெட்கித் தலைகுனியாது – எங்கள்

                                        (உருண்டோடும்)

சாதிமத பேதமில்லை யாருக்கும் பயந்ததில்லை

          சோதியாய் விளங்கும் – எங்கள்

                                        (உருண்டோடும்)

பொய்யை மெய்யாக்கும் செய்தி பத்திரிகைக்குச்

          சவால் விடும் – எங்கள்

                                        (உருண்டோடும்)

கலைகளை வளர்த்திடும் காவிய வார இதழாய்

          சுளையோடு பலா கொடுக்கம் – எங்கள்

                                        (உருண்டோடும்)

சட்டங்கள் தூங்கும்போது, தர்க்கர்களை

          அடியோடு  பொசுக்கிவிடும் – எங்கள்

                                        (உருண்டோடும்)

Comments

Popular posts from this blog

என்னில் வாழ் குமர குருபரா

பனித்துளிகள்

முடிவு எடுப்போம்