வாடாமலர்
வாடா மலரொன்று வசந்தம் தேடுது
வாடிய
மலரிங்கு வைகரை பாடுது
நாடா
சுகமொன்று நாட்டில் தேடுது
நாறிய
காற்றிங்கு மூக்கை மூடுது
தேயா
தேரிங்கு தெருவுக்கு வருது
நாயாய்
இருந்தவர் நாதியற்றுப் போனதால்
ஓயா
காற்றும் ஓய்வெடுக்க பார்க்குது
சேயாய்
பிறந்ததுமே தாயாக நினைப்பதாலே.
திரும்பாத பால்முகம்
விரும்பாது போனதே – அன்று
சிறுபாதம்
என்மார்பில் செருகி வைத்ததே
கரும்பாகும்
இன்பேச்சு கறுப்பாகி போனதே – இன்று
வெறுநாதம்
என்காதில் வீழ்வதாய் ஆனதே
கருங்காகம்
உன்வரவை சொல்லிப் போனதே – நீ
கருவாடாய்
வருவாய் என்றதா சொன்னது?
உருகுமத
தங்கமெலாம் உன்நிழல் தேகத்தே – என்று
Comments
Post a Comment