பொங்கல் வாழ்த்து
கல்லை வடித்துக் கவின் கலையாக்கி
சொல்லில்
வடியாச் சுந்தரச் சிலையாய்
பல்லவர்
தந்தார் வாயிலும், கோயிலும்
கல்லை,
முள்ளைக் கரம்பலைத் திருத்தி
வில்லை
நிகர்த்த வீரராம உழவர்
நெல்லை
விளைத்தார் நிறைவைத் தந்தார்.
பல்லவர்
புகழைப் பழுதறச் சொல்ல
பலநாள்
உண்டு உழவர்க் கென்றே
ஒருநாள்
வந்தது உயர்வைத் தந்தது
உழைப்புத்
திருநாள், பொங்கல் புதுநாள்
மறுநாள்
வருவது உழவுத் திருநாள்
உழவேர்
போற்ற உழுதுண்டு வாழ
இல்லவர்
எல்லாம் இருந்திடம் கூடி
களிப்புத்
தீர களித்தே மகிழ்க.
Comments
Post a Comment