காதல் வடு

 


பருவப் பெண்ணே பருவப் பெண்ணே பக்கத்தில் வராதே

பார்த்துப் பார்த்து எந்தன் மனம் ஏங்க வைக்காதே.

 

குயிலே குயிலே குயிலே என்று கூவி விடாதே

கூலி கேட்டு என்னிடமே வந்து விடாதே.

 

பாவம் இவன் பாவம் இவன் பாவலன் தானே

பக்கத்தில் வந்து நின்னுபுட்டு பறந்து விடாதே.

 

சொல்லு உந்தன் சொல்லு உந்தன் செல்வ மொழியிலே

சென்று விட்டு வந்தவனை வாட்டி விடாதே.

 

மரம் மரம் மரமென்று இருந்து விடாதே

மக்காயும் என்னைநீ ஆக்கி விடாதே.

 

மயிலே மயிலே மயிலென்று ஆடி விடாதே

மயக்கம் கொடுத்து எனைநீ மடக்கி விடாதே

 

அழகென்று அழகென்று காட்டி விடாதே

ஆடவன்தான் என்னைநீ ஆட்டி விடாதே

 

அன்னம் அன்னம் அன்னமென்று நடந்து விடாதே

அருகில் வரும் காளையர்களை மறந்து விடாதே

 

சிரம்நிறம் சிரம்நிறம் காட்டி விடாதே

காலத்தால் அதன்நிறம் மாறிவிடுமே

 

புருவம் புருவம் புருவமென்று பூத்து விடாதே

புத்திலே  பாம்பென்று காட்டி விடாதே

 

இமைஇமை இமையென்று இமைத்து விடாதே

இளையவன் எனைநீ இளிக்க வைக்காதே

 

கண்ணு கண்ணு கண்ணென்று பார்த்து விடாதே

கண்டவரையும் கண்டுபுட்டு ஓடி விடாதே

 

கழுத்தென்று கழுத்தென்று சுளுக்கி விடாதே

கழுத்திலே தாலி யொன்றை ஏற்றி விடாதே

 

இடையென்று இடையென்று இசைக்க வைக்காதே

இல்லாள் என்றுநீ சொல்லி விடாதே

 

காதல் காதல் காதலென்று காத்து இருக்கின்றேன்

காக்க வைத்து எனைநீ மாற்றி விடாதே.

Comments

Popular posts from this blog

என்னில் வாழ் குமர குருபரா

பனித்துளிகள்

முடிவு எடுப்போம்