தலையங்கம்
தலைக்கொரு பேச்சில்
தலையங்கம் கொடுத்து
தனக்கிலை
தரணிக் கென்றே வாதிடுவான்
சிலைக்கொரு விலைபேசி நம்பொருள் விற்பான்
இணக்கிலை கலைப்பொருள் மகிமையை
விவரிப்பான்
நிலைக்கொரு நிலைபோம் வானத்து மேகமும்
பயனேயற்றி ஒருபோதும் தீங்கிழைப்ப
தில்லை
மலைக்கொரு கொடியேற்றி மாலைக்குள் திசைமாறும்
மதிகெட்ட நிதிகொண்ட கதியற்ற கோமான்.
Comments
Post a Comment