வாழ்த்துப் பா

 கலைமணி கனிமொழி நனிமிகு இன்பம்

          நிலையென நித்தமும் நின்னுற வாட

வலைமொழி பேச்சில் வயப்படும் மனமே

          சிலையென மாறா சித்திர மாவாய்

கலையென இன்பம் தமிழினைப் பருகி

          நிலையென மொழிவாய் நல்மன தோட

மலையென துன்பம் நிலையென வரினும்

          இலையென நினைத்து கலையினைப் பரப்பு.

 

பனிவிழு பொழுதில் பருகிடும் இன்பம்

          சிற்சில நேரம் நின்னுற  வாடும்

கனிவழி அறிந்திடும் பல்சுவை இன்பம்

          நாவினில் எச்சில் நிலைத்திடும் வரையே

இனிவரும் காலம் அறிந்திடும் இன்பம்

          இன்சுவை பேச்சாய் அமைந்திட வென்றே

தனிவழி நின்று பருகிடும் சுவையில்

          இவ்வொரு வாழ்த்தும் சேர்த்திடு என்பேன்.

 

(வேறு)

தட்டு எடுத்து மாவு இட்டு

          நீரும் கொஞ்சம் அளவாய் ஊற்றி

பிட்டுப் பிட்டு பிய்த்த மாவை

          தட்டித் தட்டி நெய்யில் போட்டு

சுட்ட பின்னே கையில் எடுத்து

          சுவைக்கும் அந்த நாவில் வைப்பாய்

பட்ட சுவையது தொடர்ந்து வரவே

          விட்டேன் தூது சிறப்பென வாழ்த்து.

Comments

Popular posts from this blog

கடமை 2

திருப்பூர் குமரன்

என்னில் வாழ் குமர குருபரா