காதல் வாசல்
முதுகலை
படிக்கையிலே
எதிர்வீட்டுக்
கன்னியவன்
புதிராய்
நின்றிருப்பாள் – சன்னல்
புதரில்
மறைந்திருப்பாள்.
முதல்சந்திப்பே
நிறுத்தத்தில்
விருத்தத்தில்
நானிருந்தேன் – அவள்
விருப்பத்தில்
நானிருந்தேன் – வான்
கருக்களில்
நான்விழுந்தேன்.
ஒப்பிலா
அழகுடையவள் – தினம்
ஒப்பனையில்
திகழ்ந்திடுவாள்
சத்தான
அவள்பேச்சில்
முத்தான
முத்துதிரும்
பேருந்தில்
போகும்போது
பல்காட்டி
தலையசைப்பாள் – என்
கண்மட்டும்
விடைகொடுக்கும்
மனம்மட்டும்
விடமறுக்கும்
கியுஎம்சி
வாயிலிலே – நீண்ட
கியூவிலே
கன்னிகள் கூட்டம்
குயிலால்
அவள்வரவை நோக்கி
குழலாய்
நின்றிருப்பேன்.
முல்லைப்பூ
வாங்கி
முள்மீது
நடந்து – நான்
தில்லைப்பூ
கொடுப்பேன் – அவள்
இல்லைப்பூ
வென்பாள்
கண்கள்
காதல்பேசும் – கை
விரல்கள்
உறவுபேசும் – இரு
மனங்கள்
ஒன்றாகும் – ஆங்கே
தண்டமிழ்
மணமாகும்
பிறப்பினில்
மலையாளம் – நான்
பிறப்பினில்
தமிழாளும் – கண்
சிறப்பினில்
கவிதைகள் -நல்
உறவினில்
பிறந்திடும்
கடற்கரை
மணலெல்லாம் – எங்கள்
காலடிரேகை
காட்டும்
படகோர
நிழலெல்லாம் – எங்கள்
பாவியம்
பாடிமகிழும்
சன்னல்
என்முகம் பார்க்கும் – பின்
நிலவு
அதில் தோன்றும்
சன்னல்
இதழ் திறக்கும் – என்
சலனம்
அதில் தோன்றும்
சுகலோக
வாழ்வினிலே
அகலாய்
நின்றவள்நீ
நகம்நோக
நின்றாலோ
சதையாக
நின்றேனே
மலையாளி
என்பதாலே
மலையைக்
காட்டிவிட்டாள்
விலையாகிப்
போகுமுன்னே
விலகிப்
போய்விட்டாள்
மழைவரு
வதென்று – வாடை
அழைத்துச்
செல்ல – குடை
வேண்டும்
என்று இடையாள்
எடுத்துச்
சொன்னாள்.
பகலைத்
தேடி நான்
பலகாலம்
நின்றிருந்தேன் – அவளோ
இரவையே
தேடுகின்றாள் – அதிலென்
உறவையே
நாடுகின்றாள்
விடுப்பு
வேண்டுமென்றால்
கடுப்பு
காட்டுகின்றாள்
கறுப்பு
வரட்டுமென்று
பகலை
விரட்டுகின்றாள்
அடுப்பே
வெம்மையென்று
கடுப்பாய்
இருந்துவிட்டாள் – இன்று
அணைப்பே
சுகமென்று
அணையை
திறந்துவிட்டாள்.
அடியெடுத்துக்
கொடுக்கின்றாள்
துடியெழுத்
தாகின்றாள் – அவள்
விடியலைத்
தேடுகின்றாள் – நான்
மடியலை
நாடி நின்றேன்.
கடுக்காய்
இனிக்குதடி – உன்
கடுமையான
பார்வையிலே – என்
நடுக்கம்
போனதடி – உன்
தடுப்புச்
சுவரினாலே.
நிழல்பட்ட
இடமெல்லாம்
நிஜமாகவே
தோணுது – அவள்
போய்விட்டாள்
என்பதுவோ
மறந்தே
போனது.
அழமட்டும்
தோன்றாது
ஆழமாய்
வாழாது – அவள்
மேலோட்டமாய்
இருந்துவிட்டாள் – இன்று
தேரோட்டமாய்
ஆகிவிட்டேன்.
யாழ்மீட்டும்
விரல்களிலே
நாமீட்டித்
தந்தாள் – அதில்
பாவெடுத்துக்
கொடுத்தாள் – இன்று
பாவாகி
நிற்கின்றாள்.
ஆள்மட்டும்
தெரியாமல்
ஆணை
இடுகின்றாள் – என்
சேனை
அவிழ்க்கின்றாள் – அதில்
தாளை
நிரப்புகின்றாள்.
கலைதீட்டும்
கண்ணாளோ
மலைமுட்டச்
சிலையானேன் – அவள்
நிலைமூட்டக்
கனியானேன் – இன்று
அலைதொட்ட
கவியானேன்.
நிதம்பார்க்கும்
பார்வையிலே
இதமாய்
இருந்திருந்தாள்
சதைமேல்
ஆசைவைத்தாள் – நானோ
பதைக்க
அனுப்பிவிட்டேன்.
மனையாட்டி வாழ்வில்
எனைவாட்ட
வந்தாள்
வினையாற்றும்
போழ்தில்
எனைவிட்டுப்
போனாள்.
என்னை
வாட்ட எண்ணி
தன்னை
வாட்டிக் கொண்டாள்
மண்ணை
வாழ்த்த எண்ணி
மண்ணுக்குள்
வாழுகின்றாள்.
இதயம்
தூங்கிட
இதம்பல
நாடிட
தூங்க
நினைத்தேன் – அவள்
நினைவோ
தூங்கவில்லை.
Comments
Post a Comment