இது உண்மை
என்னைநீ மறந்தாலும்
என்னாலது முடியாது
தன்னைநீ வெறுத்தாலும்
தன்னாலது இயலாது
உன்னைநீ மறைத்தாலும்
என்னாலது நடவாது
மனம்நீ மாறினாலும்
என்மனமென்றும் மாறாது.
கல்மனம்நீ கொண்டாலும்
கனியென நினைப்பேனே
தேளென்று கொட்டினாலும்
தேனென்று சுவைப்பேனே
அலைகடல் ஓய்ந்தாலும்
என்னலை ஓயாது
மலையென சுமைவந்தாலும்
இலையென நினைப்பேனே.
Comments
Post a Comment