அகம்
தமிழகம் பிறந்தது
தாயகத்தில் – அதைத்
தரணியர் போற்றினர் தமிழரைத்
தங்கம் பிறந்தது
பூமியகத்தில் – அதைத்
தோண்டி எடுத்தார் நம்மில்லத்தார்
முத்து பிறந்தது
கடலகத்தில் – அதைப்
பாண்டியன் எடுத்தான் நம்மிடத்தில்
மேகம் கூடியது
வானகத்தில் - அதை
மெச்ச அழைத்தது மயிலகம்.
Comments
Post a Comment