தென்றலும் புயலாய் மாறும்
மங்கையர், நாட்டில் மணிமகுடம் சூட
அங்கையர் கன்னியின்
அருமைத் திட்டம்
செங்கைகள் தீட்டும்
செம்மையான திட்டம்
பஞ்சணையின் போது
வஞ்சனை பேசி
பெண்களின் கற்பை
விலைபேசும் போது
புனித தென்றலும்
புயலாய் மாறும்
பெண்மையில் கற்பே
பெரிதெனப் போற்றும்
பண்பில்ல உயர்ந்த
பாரத நாட்டில்
வன்மையில் ஒருவன்
வஞ்சியை நாடின்
கற்பினைக் காக்க,
கண்ணகி போல
காற்சிலம் பெடுத்துக்
காமப் பேயை
மலையேற்றி விட்ட
மலைப்பில் நிற்பாள்.
காட்டினை அழித்து
நாட்டினை ஆக்கும்
படிப்பு அறிந்த
பண்பாற் வளனும்
படிப்பினை அறியா
பண்படா மைந்தனும்
நாட்டின் வளமே
காட்டில் உள்ளதை
அறியா நெஞ்சு
அடிவே ரெடுக்கும்.
எரித்த காட்டை,
எரியும் மனத்தை
அரித்த பின்னே
அறியும் போது
இழந்த மழையும்
எழுதல் உண்டோ?
வறண்ட பூமி வறட்சி
தாங்கி
திரண்ட நெஞ்சும்
வறட்சியி னாலே
உமிழும் வெப்பம்
ஊரைச் சுற்றி
உலவும் தென்றல்
புயலாகி
உறையும் தயிரென
உலகிடை ஆவோமே.
Comments
Post a Comment