நாளொழுகு

             குற்றத்தைச் சுரண்டுகின்ற

பிச்சைக்காரர்கள் இங்கே

எக்கச் சக்கமாய்ப் போச்சு – இதை

எத்திக்கும் இன்று

பார்த்திட லாச்சு.

          அற்றதை அறுக்கின்ற

                    சோம்பேறிப் பேச்சு

                    கோடிபல ஆச்சு – இதை

                    வெச்சு நாடே இன்று

                    ஆளுவ தாச்சு.

          கற்றதை மறக்கின்ற

                    நிலைவந் தாச்சு – நித்தம்

                    கலையை பேசுகின்ற

                    பேச்சொழிந்து போச்சு – அதன்

                    மூச்சு நின்றே போச்சு.

          பற்றதை பறிக்கின்ற

                    நிலைவந் தாச்சு – நித்தம்

                    சிலைவைத்து பேசுகின்ற

                    பேச்சோங்கி போச்சு – அதன்

                    நிலையுயர் வாச்சு.

Comments

Popular posts from this blog

என்னில் வாழ் குமர குருபரா

பனித்துளிகள்

முடிவு எடுப்போம்