இயேசு
இயேசுவின் காவியம்
ஏட்டினில் இருக்கும்
பேசினால்
அதுவோ பல்சுவை அளிக்கும்
இயேசுவின்
பேரில் எச்சில்கள் ஏறும்
நேசன்
கைகளோ சுத்தமாய்த் துடைக்கும்
சிலுவையில்
இயேசு தூங்கிடும் போழ்தே
எச்சிலர்
எல்லாம் எச்சரிக்கை யாயினர்
நிலுவையில்
பாவத்தை சுழியாக்கிய பின்னரே
சிலுவையில்
இயேசு தூங்கிடச் சென்றார்.
Comments
Post a Comment