இளந்தளிர்

             இளந்தளிர் விரல்கள் விளையாடும் போது

களைந்திடும் பொருளும் கலைச்சாரம் கொடுக்கும்

          விளங்கிடாப் பேச்சு விழுந்திடும் போது

                    வளைந்திடா மனமும் வலைக்குள் சிக்கும்

          களக்கதிர் நெல்போல் ஏறிடும் போது

                    உளங்குளிர் வாதையில் தன்மை மறக்கும்

          வளவன் சிரிப்பில் முத்துதிரும் போது

                    இளையவள், அவனுக்கு என்றுமனம் ஏங்கும்.

Comments

Popular posts from this blog

என்னில் வாழ் குமர குருபரா

பனித்துளிகள்

முடிவு எடுப்போம்