நாளெந்த நாளோ?


           முல்லை மலர் கிள்ளும்

மல்லி இதழ் விரலே – என்

சின்ன இதயம் கொள்ளும்

நாளெந்த நாளோ?

          சொல்லை அலர் பயக்கும்

                    செல்வி தவழ் மானே – என்

                    கன்னம் உதயம் சொல்லும்

                    நாளெந்த நாளோ?

          பல்லை குளிர் கொள்ளும்

                    சொல்லை உமிழ் தேனே – என்

                    இன்பம் உதய மாகும்

                    நாளெந்த நாளோ?

          தில்லை யுளர் கொள்ளும்

                    வில்லை கமழ் வானே – என்

                    சின்னம் உதயம் ஆகும்

                    நாளெந்த நாளோ?

Comments

Popular posts from this blog

என்னில் வாழ் குமர குருபரா

பனித்துளிகள்

முடிவு எடுப்போம்