கடமை

 

துறப்போம் மறப்போம் விழிப்போம் நாட்டில்

          துன்பம் எங்கும் பறக்கவே

இனிப்பும் காரமும் வாழ்வின் சாரம்

          இனிமை பொங்கிட வாழ்வோமே

இரவும் பகலும் நாட்டில் ஈரல்

          இரவலும் கொடுத்தலும் நம்கடமை

தமிழின் பெருமை நாட்டின் பெருமை

          தமிழர் கடமை இதுவாகுமே.

 

சூரியனின் நன்மை நாட்டில் வெளிச்சம்

          அரியவன் நன்மை தர்மமாகும்

சந்திரனின் நன்மை நாட்டின் குளிர்ச்சி

          சமுத்திரத்தின் நன்மை உப்பாகும்

ஒளியெல்லாம் வீசிடும் இடத்தின் நன்மை

          ஒளிமய மான வாழ்வாகும்

மண்ணின் கடமை நம்மை சுமப்பதுநல்

          மனம்கொண்டவர் மனதில் நிலைப்பதுவே.

 

விலங்கின் பெருமை காட்டில் என்றால்

          மனிதன் பெருமை நாட்டிலன்றோ?

ஊர்சுத்தியின் பெருமை ரோட்டில் என்றால்

          ஊர்வனர் பெருமை அதிலன்றோ?

ஊரின் பெருமை நாட்டின் பெருமை

          உலகத்தின் பெருமை உழவனன்றோ

நாட்டின் ஈரல் உழவனின் வேலை

          பசியின் தாயும் உழவன்றானே.

 

தாயின் பெருமை குழந்தை யுடனே

          தர்மம் பெருகும் நாட்டினிலே

தாயின் சொல்லே பிள்ளையின் கடமை

          தாய்மை வாழும் இடத்தினிலே

கல்வியின் பெருமை பள்ளிக் கூடத்திலே

          கள்வனின் மனமும் திருந்தினவே

நெசவின் பெருமை துணியா குமேஅதன்

          நெஞ்சில் எல்லாம் பசுமையே.

 

மஞ்சு வளர்ந்ததோ மலைகா டுகளில்

          இஞ்சகரம் பெற்ற பயனெல்லாம்

வீட்டிலோ நெல்லவிழ்க்க வீதியெல்லாம் நிழல்தர

          வீழ்ந்திட்டுப் பயன் அளிப்பதுவே

புல்லென்று மிதித்து அதன்மேல் நடந்திட

          புல்லென்று வந்திடும் பசுபோல

இயற்கை  உதவும் பயனை யெல்லாம்

          செயற்கைச் செல்வம் பெற்றவனெங்கே?

 

இவனேழை என்று கூறும் இரக்கம்

          இல்லாத மாக்கள் நெஞ்சம்

அம்மாக்கள் ஒவ்வோர் சொல்லின் பயனெலாம்

          அம்மானின் வாழ்வில் தேய்பிறையே

தானேழை என்றுகூறும் பங்காளன்

          தானே வந்துழைத் திடுவானே

இவனுரைக் கும்ஒவ்வோர் சொல்லின் பயனெல்லாம்

                  இவனது வாழ்வில் வளர்பிறையே.

Comments

Popular posts from this blog

என்னில் வாழ் குமர குருபரா

பனித்துளிகள்

முடிவு எடுப்போம்