மாட்சிமை யுடையார்
உலகினில் பிறந்த
உறவுகள் எல்லாம்
ஒருவரை யொருவர்
புரிந்த தாலே
ஈருடல் ஓருயிர்
ஒன்பத் தாறும்
ஒருங்குடன் பெற்றே
உலகிடை வாழ்வர்
கலைமகள் உலகினை
காத்திடும் பொழுதினில்
நிலைபெறும் பொருள்கள்
நீடுநாள் வாழும்
உலைகொள் அரிசி
உலவிடும் நீரால்
மலைபோல் பசியோ இலையென வாகும்
சிலைபெறும் மதிப்பும்
செந்நில மாந்தர்
நிலையெனப் பெற்று
வாழ்ந்தோர் சிலரே.
நிலைகொள் பிணியை
நாடிடும் மாந்தர்
மனநிலைக் கொவ்வா
மாட்சிமை யுடையார்
தினமலர் போலவே
தினமவர் பூப்பர்.
Comments
Post a Comment