காலைக் கதிரழகு
சேவலின்
கூவலில் சாகும் விடியல்
காலைக்
கதிரோன் சாலையில் புகுந்து
மாலைக்
கண்ணை மயங்கச் செய்யும்
நாடும்
பொழுதை நயமாய் ஆக்க
காலைக்
கதிரோன் கலையாய் வந்து
வண்ண
வண்ண விளக்காய் விளங்கி
விடியல்
பொழுதை விளக்க முயல்வான்.
ஆயிரம்
அழகு அடுமையாய் காண
அழகு
மயிலென பழகு வானில்
ஞானப்
பல்லக்கில் ஞாயிறு வந்தான்.
காந்தப்
பூவோ கதிரோன் வரவை
கவலை
இன்றி கருத்தாய் நின்று
முழுஒளி
தன்னை முகத்தில் ஏற்க
முழுமுகம்
காட்டி முன்னதாய் விடியும்
விரியும் கதிரில்
விடியும் உலகம்
விளக்கம் தெரியா
வழுவி நிற்கும்
ஏழு வண்ணம் ஏற்ற
வானம்
ஒற்றுமை தன்னை
ஓங்கிக் காட்டும்
ஆயர் பகுதி ஆவெனும்
ஒலியுடன்
அழகாய் விடியும்
பழகு நாட்டில்
இதுவே மணியென
இருந்து விட்டோம்
இரவு மழையில்
இறங்கி வந்து
புல்மேனி தன்னில்
புனைந்து இருந்த
பனித்துளி அதுவே
பதறி ஓடும்
பனிபடு கனிகள்
நனிமிகு குளிரில்
நடுநிலை யோடு
நெடிது வாடும்.
Comments
Post a Comment