வேதனை உலகம்
(பல்லவி)
வேதனை உலகில்
வேதங்கள் மறப்போம்
சாதனை புரிவோம்
சமத்துவம் அடைவோம்.
(சரணம்)
பன்மொழிப் புலவன்
பாடிய பாட்டை
பாரினில் பரப்ப
பறந்திங்கு வாரீர்
மென்மொழிச் சொல்லால்
வன்சொலர் காதில்
மெருகாய் ஊதி
சமத்துவம் வளர்ப்போம்.
பசிபடு குழந்தை
மிதிபடும் போது
நசிந்திடும் பொருளை
கொணர்ந்திங்கு சேர்ப்போம்
காற்றது உணரா
இனப்பேய் நமக்கு
காந்த மென்றால்
காறி உமிழ்ந்திடுவோம்.
Comments
Post a Comment