ஆளுமையின் விளிம்பு

 


        நரைதட்டி நிறைவாழ்வு வாழாத உழவன்

தினமும் கரையேறி நீர்ப்பாய்ச்சி உழுவான்

          திரைகட்ட முடியாது தவிக்கின்ற போழ்து

                    இருக்கிற நிலமதையும் பறிமுதல் செய்வான்

          உழைக்காமல் ஊர்ச்சொத்தை தமதென்றே ஆக்கும்

                    வளையா முதுகுடைய பணக்காரன் என்பான்

          நுழையாத தர்மவாசல் நுழைய வேண்டி

                    அழையாத பூட்டையும் உடையுங்கள் திறக்கும்.

 

          காட்டேறி மலையேறிப் போகும் முன்னால்

                    வீடேறி வீண்வம்பு செய்யு தங்கே

          ஓட்டேறி ஆட்சிதனில் அமர்ந்து விட்டால்

                    நாடாளும் முழுவுரிமை பெற்ற தாமோ

          பாட்டாண்ட புலவனிங்கே பெற்ற விடுதலை

                    முழுமையின்னும் பெறவில்லை புறப்பட வாரீர்.

          ஆட்கொண்ட சட்டத்தை அலசிப் பிழிந்து

                    ஆளுமையின் விளிம்பை உடைத்தால் திறக்கும்.

Comments

Popular posts from this blog

என்னில் வாழ் குமர குருபரா

பனித்துளிகள்

முடிவு எடுப்போம்