கசப்பு மருந்து

 


        இரண்டிலே ஏபிசி படித்தேங்க

இருபதிலே அகரமுதல அறிந்தேங்க

          கரண்டியாலே கணக்கெல்லாம் கற்றேங்க

                    சுரண்டலைநான் முன்னமே அறிந்தேங்க

          வரண்டாவிலே வர்ரவங்களைச் சந்திப்பவங்க

                    வரதட்சணைக்குப் பணமெல்லாம் சேக்கராங்க

          கரண்டாலே அவங்களைச் சுடனுங்க

                    அப்பத்தான் நம்மநாடு சுதந்திரங்க.

 

          சோலையாய்ப் பாரதம் இருந்ததுங்க

                    சேலையால் அந்தநிலை போனதுங்க

          ஆலையாய் மனிதரெல்லாம் இருந்தாங்க

                    அரிசிவிலை தங்கவிலை ஆனதுங்க

          வேலையாய் பலபடி ஏறினேங்க

                    தாளையார் பார்த்தெனக்கு கொடுத்தாங்க

          பாலையாய் என்மனது ஆனதுங்க

                    காலையிலே ஃபைல்தூக்க முடியலிங்க.

 

          கூலிவேலை செய்யரவன் நானுங்க

                    குதிராக பணமெலாம் அல்லுராங்க

          வேலியாய் இருப்பதாய் சொல்லுராங்க

                    அவங்களே பயிரெல்லாம் மேயுராங்க

          தாலியை ஒருத்திக்குக் கட்டுராங்க

                    பிள்ளையை ஒருத்திக்கு கொடுக்கராங்க

          கோலியாய் உலகத்தை நினைக்கராங்க

                    கேலியாய் நமையெல்லாம் பார்க்கிறாங்க.

 

          ஓட்டுவாங்க நோட்டுகொஞ்சம் காட்டுவாங்க

                    நாட்டுவேலை மும்முரமாய் செய்யுவாங்க

          சேட்டுவீட்டு பெட்டியிலே திணிப்பாங்க

                    சேரிப்பக்கம் விழாக்கோலம் அமைப்பாங்க

          பேப்பரெல்லாம் சீர்த்திருத்தப் பணிதாங்க

                    நாப்புறமும் கார்வோட்டி திரிவாங்க

          தோப்பெல்லாம் விளக்கேற்றி பேசுவாங்க

                    தோல்வியென்றால் தொந்தரவு தருவாங்க.

 

          காசோலை நாசவேலை செய்யுவாங்க

                    கடுதாசி சரியாக வரலீங்க

          மசோதாவில் கையெழுத்து போடுவாங்க

                    மறுநிமிடம் மாற்றியமைக்கச் செய்யுவாங்க

          ஆபீசு நேரமெல்லாம் தூங்குவாங்க

                    ஆயாச வேளையிலே செய்யுவாங்க

          ஓபிசி என்றுமாற்றி படிப்பவங்க

                    மத்தியிலே அரசாட்சி செய்யுராங்க.

 

          குழாயிலே குடிதண்ணீர் வரலீங்க

                    புட்டியிலே முழுவளவும் நிறையுதுங்க

          பாழான மிட்டாய்க்கு ஆசைதாங்க

                    பார்த்திருந்து கண்ணெல்லாம் பூக்குதுங்க

          ஏடான நூலெடுக்க ஆர்வந்தாங்க

                    பாழான படிப்புதான் வரலீங்க

          சூடான பேச்செல்லாம் மதித்தோங்க

                    சுதியில்லா வாழ்க்கையை அமைத்தோங்க.

 

          ஏசியிலே பயணம்செய்ய ஆசைதாங்க

                    ஓசியிலே போறவனுக்கு கொடுப்பாங்க

          காசியிலே வீடுவாங்க நினைத்தேங்க

                    நாதியில்லா உனக்கெதுக் கென்றாங்க

          காலையிலே ரேசனில் நிப்பேங்க

                    மாலையிலே கணக்கெழுதி தருவாங்க

          ஓலையிலே கணக்கெழுதி வைப்பவங்க

                    மையில்லா பேனாவில் எழுதுவாங்க.

 

          பாயாத இடமொன்று இல்லீங்க

                    கூவஆறு பட்டணத்தின் நாளங்க

          ஓயாத சத்தமொன்று இருக்குங்க

                    கூசஆத்து கரையிலே பிறக்குதுங்க

          காயாத கடலும் காயுதுங்க

                    அதையும் விலைபேசி விக்கராங்க

          தேயாத காலெல்லாம் குடிசையிலீங்க

                    இதுதான் பெரியவங்க வேலைங்க.

 

          வெளிநாட்டு மோகமெல்லாம் எதுக்குங்க

                    நம்பொருளே வெளிநாடா குதுங்க

          உளிவெட்டி சிற்பத்தை செய்யரவங்க

                    கலிவெட்டி தின்னவும் முடியாதவங்க

          துளிரத்தம் உடம்பிலே இல்லாதவங்க

                    இந்தநாட்டு முதுகெலும்பாய் ஆனாங்க

          களியாட்டம் போடறதை ஒழித்தாங்க

                    நாமெல்லாம் தமிழராய் வாழலாங்க.

 

          தாயாய்ப் பிள்ளையைப் பெக்கரவங்க

                    தனியாய் அதனை வைப்பாங்க

          சேயாய் இருக்க வேண்டியவங்க

                    விடுதியில் சேர்ந்து வாளருவாங்க

          தனியாய் இருந்து வளருவதாலே

                    பனியாய் பிணிகள் தொத்துதுங்க

          கனியாய் இருக்க வேண்டியவங்க

                    கசப்பு மருந்தில் தூங்குராங்க.

Comments

Popular posts from this blog

என்னில் வாழ் குமர குருபரா

பனித்துளிகள்

முடிவு எடுப்போம்