பனித்துளி
தூங்கும் வெண்பனி
தனிமுத் தென்றிர
கலைமகள் திருமகள்
இருந்திடும் மலரோ
நல்லிரு கைகள்நன்
நாயகன் எதிரே
பல்லிதழ் அடைந்து
பார்ப்பது போல
வெண்ணிலா வழியில் நன்நிலக் குளத்தில்
செந்நிற இதழ்மலர்
வணங்கி நின்றது.
பனியின் கொடுமையால்
பதுங்கும் வெண்ணிலா
பிணியில் வாடும்
பூங்கொடி, புதிதாய்
ஒன்றை செய்வதாய்
ஒதுங்கி நின்று
தன்பிணி பரவா
தடுப்பது போல
தன்னொளி மறைத்து
வானில் நின்றது.
நிலவின் ஆட்சி
நீட்டும் போது
பல்கலை அரசர்
பூங்துகி லடைவர்
சில்வன் டாமரை
சிறையுட் தங்கும்
நல்மனக் குரங்கின்
நித்திரை கிளையில்
கல்மனக் குடியில்
காரிருள் விளக்கம்
அம்மனம் கரைய
நம்மொழி இசைக்கும்
வானுயர் மரத்தின்
வன்கிளை இலைகள்
தானுணர் மொழியில்
தந்திடும் இசையோஓ
இரவது துயில தாலாட்டு
பாடும்
கடைக்கண் பார்வையர்
கணைக்கண் காட்டி
காதல் போதையில்
களமனம் மகிழ்ந்திடும்
காதல் நங்கையின்
நுனிவிரல் நிலத்தை
கோல மிட்டு நின்றிடும்
இடத்திற்
கோல மாமன் கோதிட
வருவான்
அவ்விடை புழுக்கம்
நீங்கிட பனியோ
உள்ளுழை புகுந்து
இலகிட வைக்கும்
நிலமதில் மழையால்
நின்றிடும் பசும்புல்
நீடு வாழ்மர நிழலில்
தங்கும்
தானூர் வெண்பனி
தரணிக் கீந்திட
முழுநிலா பொழுதில்
மோதிடும் அடைத்தேன்
விஞ்சி கீழே வீழ்வதைப்
போல
வெண்முத் ததுவீழ
நின்றிடும் பசும்புல்
இட்டது கணையை
விட்டது போல
பட்டதும் பனியில்
பூட்டிய திரையைத்
துரியோ தனன்தொழில்
தடையிறா நடந்தது.
நிலவதில் அமைச்சாய்
நீடித்த பனித்துளி
பகலதில் மறைந்து
படுக்கச் சென்றதோ?
Comments
Post a Comment