நிலமகள்
நிலமகள் உனக்கென்றும்
புதுமகளாய்
நலமுடனே
இயைந்து வாழ்வாயாக
நலமெலாம்
உனக்கென்றும் அடிமையாய்
நாள்தோறும்
போற்றி வாழ்வாயாக
கலைவளம்
உனக்கென்றும் சிறந்தோங்க
கவலைக்
கனலை மறப்பாயாக
நிலைவளம்
உனக்கென்றும் சொந்தமாக
வலையாய்
சொந்தங்கள் பெருவாயாக.
அலைகடல்
ஓயலாம் உன்நினைவலை ஓயாது
பெரும்பிணி
மயக்கத்தா லுமுனை மறவேனே?
நிலைமடல்
நினக்கு நெடுநாளாய் விட்டது
விரும்பி
விட்டதல்ல வழியிலா நின்றது
சிலைமகள்
உனக்குச் சிரிப்பூட்டும் நாளினை
பெருமை
யோடன்று அழைப்பிதழ் வைத்தாய்
தலைமகன்
பட்டம் சூட்டும்புது நாளில்
சிறிதே
உன்னிடம் பேசிட முடிந்தது.
நாள்பல
முடிந்தும் நானுனை மறவாது
நாடிய
கவிதையைத் தேடி அலைந்தேன்
வாள்பல
சுழற்றி உனைமற வென்றாலும்
தோள்பல
கசக்கி சோதனை செய்தாலும்
வேலிடைக்
குமரா வேலிநீ யெனக்கு
பணியிடை
யுன்னை மறந்தே னென்றோ
பீலியோ
டங்கு கலங்கிடல் வேண்டாம்
இனியென்
கடிதம் தினம்தினம் இனிக்கும்.
அன்பும்
அறமும் பண்பின் பயனாய்
இன்பம்
அதுவே வாழ்வாய் நோக்க
கன்னித்
தாயின் கருணை மழையில்
கண்ணது
இமைபோல் சேர்ந்து வாழ்க
கடலூர்
உறங்கும் அடியார் கொள்கை
மடலென
விரித்து மகவெனக் கொள்க
மருவத்தூர்
சிறக்கும் அடிகளார் மொழிகள்
மருவெனக்
கொண்டு இனிதாய் வாழ்க.
அறமும்
பொருளும் இன்பம் வீடோடு
நவில்தொறும்
நாணயத்தில் நித்தம் உழல
திறனே
வாழ்வில் திருக்கண் பார்வையில்
செறிவுடனே
வாழ்க்கை அமைத்து வாழ்க
புறமுன்
கரங்கள் புகழொமு விளங்க
அகமுன்
நிலைகள் நிலவென்று கொள்க
உறவை
உரமாய் உன்கை பெற்று
பயிரை
நலமாய் வளர்த்து வாழ்க.
Comments
Post a Comment