நாடு
வைகாசி மாதம்
வைகரைப் பொழுதில்
கைராசி
கேட்டு காதலன் இருப்பான்
பைகாசு
பார்த்து பழகிடும் பாவையர்
நைசாக
பேசி மாதத்தைக் கழிப்பர்.
தையல்
விருப்பன் தவறிடும் போழ்து
மையல்
பாசம் சிலரிடம் பொங்கும்
கையினில்
பேனா சிலரிடம் சிரிக்கும்
வையக்
கயிறு சிலரிடம் பேசும்.
காளைப்
பித்து நாற்று விட்டு
காலைப்
பொழுதில் கல்யாணி பாட
ஓலைச்
சித்து நன்றாய்ச் செய்து
பாலைச்
சொத்தைப் பவனி அனுப்பி
நாளைச்
சித்தை இன்றே நினைத்து
வாலை
வித்தில் வளமை ஊறும்
தாளை
கிழித்து விழித்த பாவலன்
நாளும்
இன்று முகாரி பாடுகிறான்.
நீதிக்கு
வணங்கின் நிழலும் மிதிக்கும்
நேர்மை
வாழின் வறுமை தவழும்
சாதிக்கு
இணங்கின் சமத்துவம் நீங்கும்
வேர்வில்
வாழின் வேதனை புரியும்
ஆதியர்
மறப்பின் ஆக்கம் பெருகும்
கூர்வில்
அம்பே குழப்பிடும் உலகை
ஊதியம்
கூடின் உலவிடும் இன்பமிதில்
ஓர்இல்
வாழின் அதுவே போதும்.
முள்வழி
மையும் உன்வழி நானும்
உரவிடும்
போழ்து கவிதை பிறக்கும்
உள்விழி
அதனில் குளித்திடும் போது
இதயம்
எனக்கு இயங்கிடும் நன்று.
கள்விழி
மயக்கம் எள்விழ போனது
உதயம்
எனக்கு அன்றே ஆனது
அள்ளிடும்
அன்பை அகரமாய்த் தந்து
கதரிடும்
எனக்குக் காப்பாய் வந்தாய்.
மருந்தின்
வேலையை அறிந்ததார்
உத்தமர்
வழியை தொடர்வதார்
கருத்தின்
பிணைவில் இருப்பதார்
சத்தியம்
வாழ்வாய் உணர்வதார்
பாருள்
நிலையாய் இருப்பதார்
நித்தியம்
புகழை விரும்பாரார்
தேருள்
சிலையைப் பாராதார்
தேவன்
அடியில் இருப்பவரே.
சத்தியப்
பேச்சு கத்தியால் போச்சு
வித்திடும்
மூச்சு வீம்புக்கு ஆச்சு
கத்திடும்
பேச்சில் சத்தியம் போச்சு
அத்திடம்
நாட்டில் நம்பிக்கை ஆச்சு
வத்திடும்
வாசம் அறையோடு போச்சு
சித்தியிடம்
நாடு சிக்கியதாய் ஆச்சு
இத்திடம்
நாடு கிளைவிட் டாச்சு
பேத்திடில்
பாரினில் பகலாகிப் போச்சு.
Comments
Post a Comment