நாங்கள் பெற்ற சுதந்திரம்

 நாங்கள் பெற்ற சுதந்திரம்

நாடி இல்லாச் சுதந்திரம்.

 

வெள்ளை மனம் ஆகுமென்று

வெள்ளையனை வெளியேற்றினோம்

பிள்ளை மனமோ – இன்று

தில்லை நடராச னானதே – இது                (நாங்கள்)

 

அடிமை வாழ்வு வேண்டா மென்று

குடிமை வாழ்வுதான் வேண்டினோம்

தடித்த இனமோ – இன்று

பிடித்தபிடி விடவில்லையே – இது            (நாங்கள்)

 

அரிசிவிலை ஏறிப் போச்சி

பரிச விலையும் மாறிப் போச்சி

துணிஞ்ச பெண்களுக்கோ – வாழ்வு

திசைமாறிப் போச்சி – இது                         (நாங்கள்)

 

நெய்யி இன்னும் உருகலே

நெருப்பு இன்னும் அழியலே

பொண்ணு கண்ணுலே ஏனோ – நெய்

உருகிப் பாயுதே – இது                               (நாங்கள்)

 

வானம் கருத்துப் போச்சு

நிலவு மறைந்து போச்சு

சூரியன் என்னாச்சு – அங்கே

தலைமுழுகல் நடந்து போச்சோ – இது      (நாங்கள்)

 

மக்கள் மனம் பொங்கலே

பொங்கிய கடல் திரும்பலே

வங்கியிலே பணமும் இல்லே

வாழ்க்கையிலே சுகமுமில்லை – இது        (நாங்கள்)

 

வேலை பார்க்கும் பெண்களுக்கு

அழகு வார்ப்பே நாள்களாச்சு

சேலையங்கே குறைந்து போச்சு

காளைக ளங்கே குவிஞ்சாச்சு – இது          (நாங்கள்)

 

ஆல மரத்து விழுதுகளாம்

அடிமரத்துக் கிளைகளாம்

கொடிமரத்துக் குவலைகளாம் – குடங்கள்

குழாய் இடத்து சந்தைகளாம் – இது          (நாங்கள்)

 

வேகமான நாட்டிலே

வேடிக்கை இன்னும் குறையலே

கை தட்டலும், குவித்தலும் – கட்டுக்கு

அடங்கிப் போகுதே – இது                         (நாங்கள்)

 

முடிவில்லா செயலுக்கு

முடிவே ஆரம்பம்

முடிந்த செயலுக்கோ

முதலே முடிவு – இது                                   (நாங்கள்)

Comments

Popular posts from this blog

என்னில் வாழ் குமர குருபரா

பனித்துளிகள்

முடிவு எடுப்போம்