தமிழ் மணம்
விழிநிலவைத் திண்ணும்
மூக்கு
நுனிகிளியை
ஒக்கும் – அவள்
நிழலோ
மலரைப் பூக்கும் – ஆயினும்
உந்தன்
நிழலாகுமோ – தமிழே
உந்தன்
பெயராகுமோ.
பழியறியா
பாதம் – அவள்
கழிபடா
நாதம் – என்றும்
சுதிமீறா
தாளம் – ஆயினும்
சதியாளும்
நீயாகுமோ – தமிழே
உந்தன்
நிலை மாறுமோ.
மதியாகும்
அழகு – உன்
நதியாகும்
பேச்சு – அதில்
விதியாடும்
ஊஞ்சல் – என்றாலுமுன்
தேனூறும்
பேச்சாமோ – தமிழே
உந்தன்
பேச்சாமோ.
நதியோரம்
சோலை – அவள்
விழியோரம்
மாலை
தினந்தோறும்
பூக்கும் – இருப்பினும்
மணம்
தரும் உன் மலராமோ – தமிழே
உந்தன்
மணமாமோ.
Comments
Post a Comment