தாகம்
சோலையிலொரு பூவிற்குத் தாகம் வந்தது
பூத்துக்குலுங்கும் பொழுதினிலே தனிமை யானது
மாலைவந்து தென்றல்தீண்ட
இனிமை யானது
தென்றலோடு மணம்பரப்பி தழுவி வந்தது
தேன்நிலவும் அதற்கொரு
முத்தம் தந்தது
பல்நிறமும் தனதென்றே ஆக்கிக் கொண்டது
பால்நிலவில் தன்னெழிலைக்
காட்டி நின்றது
பருவத்துக் குமரனுக்கு மயக்கம் தந்தது.
பனிமலரின் எழிலுக்குக்
கை கோர்த்தது
பவ்வியமாய் அகத்தழகை வெளிக்காட்டியது
நெத்தியிலே குங்குமப்
பொட்டும்
நேர்த்தியான வடுகிடையே சுட்டியும்
கழுத்தோடு அட்டிகையும்
இடைபுகுந்த
இல்லத்தரசியின் உரிமைப் பத்திரமும்
தொட்டியலான் கையிலே
தவழ்ந்திடவும்
கட்டியலான் கைகோர்த்து வருகின்றான்.
Comments
Post a Comment