நிலவு
இளவனின் நடுவினிலே
ஒரு நட்சத்திரம்
என் மனதினிலே
நீதானே
பொன் சித்திரம்.
செங்கதிரோன் எதிரினிலே
உன்னொளி மறைந்திருக்கும்
இருள்வெளியில்
உன்னெழிலோ
தவழ்ந்து நிற்கும்.
பகலெல்லாம் உழைத்து
வந்து
படுக்கையிலே அமருகின்றேன்
இளங்காற்று வீசுமென்று
சன்னலைத் திறந்துவிட்டேன்.
பட்டதொல்லை தீரவென்றே
பக்கத்தில் அமருகின்றாய்
பதுமைபோல பேசுகின்றாய்
கறந்த பாலை கொடுத்து நின்றாய்.
முழு வானின் வெண்நிலவே
பூமியின் மதுமதியே
கருவானின் ஒளி
விளக்கே
ஒரு நாளில் மறைவதேன்?
Comments
Post a Comment