காதலி

             தடை விதித்தாள் அன்று – தன்

கடைக்கண் பார்வையால்

அடைமொழியால் என்னை

நடையொடித்து விட்டாள்.

          இடை யுடையாள் என்னைத் – தன்

                    இடை பிடிக்கச் சொன்னாள்

                    இடையர் பேச்சாலின்று

                    இடையிலிட்டுச் சென்றாள்.

 

          சடை யுடையாள் என்னைத் – தன்

                    சடைபூக்க வழி சொன்னாள்

                    சடைப்பூ வாடவில்லை

                    வாங்கியவனை வாட்டிவிட்டாள்.

 

          கொடை யுடையாள் என்று – தன்

                    கொடைத் தன்மை சொன்னவள்

                    கொடை கொடுத்த இவனை

                    கொடி பிடிக்க விட்டாள்.

Comments

Popular posts from this blog

என்னில் வாழ் குமர குருபரா

பனித்துளிகள்

முடிவு எடுப்போம்